இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2வது T20- நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் அபாரம்! இந்தியா மாஸ் வெற்றி!
டாஸ் வென்ற இந்திய அணி இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் குஷால் பெரேரா அதிகபட்சமாக 34 ரன்களை எடுத்தார். தொடக்க ஆட்டக்காரரான அவிஷ்கா பெர்ணான்டோ 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
இதனால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் தாக்கூர் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை கைப்பற்றினார். நவதீப் சைனி சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தார். குல்தீப் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடி 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 30 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதனால் இந்திய அணி வெற்றி இலக்கை 17.3ஓவர்களில் எட்டியது. இதனால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.