ஏமாற்றம் தந்த ரோஹித்,கோலி! களத்தில் இறங்கி கலக்கிய லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் இந்தியாதான் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. படுக்க முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி ஆட்டம் செல்ல செல்ல இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் குப்டில் அதிகபட்சமாக 33 ரன்களை அதிரடியாக எடுத்தார். 

மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் விராத் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது. சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

லோகேஷ் ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணி 17.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. எனவே இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்றுள்ளது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.