மேற்கிந்திய தீவுகள் அணியை மிரளவைத்த நவ்தீப் சைனி! பிறகு தட்டுத் தடுமாறி வென்ற இந்தியா!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது .


டாஸ் வென்ற இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை பேட்டிங் செய்ய பணித்தது .இந்திய இளம் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் .

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது .மேற்கு இந்திய தீவுகள் அணியின் பொல்லார்ட்  அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார் . இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி சிறப்பாக பந்து வீசிய 3 விக்கெட்களை வீழ்த்தினார் .

96 ரன்கள் எடுத்தால் என்ற எளிதான வெற்றி இலக்கை சேசிங் செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்களும் மேற்கு இந்தியத் தீவுகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர் . ஆனால் ரோகித் சர்மா 24 ரன்களும் விராட் கோலி மற்றும் மனிஷ் பாண்டே  19 ரன்கள் எடுத்ததால் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . 

சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணி நவ்தீப் சைனி அவர்களுக்கு  ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது .