இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது .
மாஸ் காட்டிய ரஹானே, பும்ரா ! மேற்கிந்தியத் தீவுகளை தெறிக்க விட்டு வென்ற இந்திய அணி !
3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து இருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது . இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியில் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். சிறப்பாக விளையாடிய ஹனுமன் விகாரி 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 418 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் தொடக்க முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.அந்த அணியின் கேமர் ரோச் மட்டும் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார் .
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் வேக பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.இதனால் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சிறப்பாக விளையாடிய ரஹானே அவர்களுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது .