மாஸ் காட்டிய ஷமி , ஜடேஜா! தென் ஆப்பிரிக்காவை தெறிக்கவிட்ட வென்ற இந்தியா!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது .


முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 71 ரன்கள் முன்னிலை பெற்றது.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய ரோகித் சர்மா இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்தார். புஜாரா சிறப்பாக விளையாடி 81 ரன்களை எடுத்தார்.இதனால் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 2வது இன்னிங்சில் 395 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்களை எடுத்தது. இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது . இதனால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது . இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட்களை கைப்பற்றினார் .

இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.