மாஸ் காட்டிய ரோஹித் சர்மா! பந்துவீச்சில் கலக்கி தொடரைக் கைப்பற்றுமா இந்திய அணி?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்துள்ளது.


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா தங்களது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். 

லோகேஷ் சர்மா அபாரமாக விளையாடி 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். விராட் கோலி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பென்னட் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.