நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு..! யாரும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது! கொரோனாவை ஒழிக்க பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

ஏப்ரல் 14ந் தேதி வரை நாட்டு மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.


இரவு எட்டு மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனா சங்கிலிதொடரை உடைக்க வேண்டும், Social distancing மட்டுமே கொரோனாவுக்கு ஒரே தீர்வு, மக்கள் ஊரடங்கு மாபெரும் வெற்றி,

இரவு 12 மணி முதல் ஒட்டுமொத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது, பெரியவர்கள், வியாபாரிகள், குழந்தைகள் எல்லோரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும், எனக்கு ஒவ்வொரு இந்தியரும் முக்கியம்.எனவே சுய ஊடரங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் 

மக்களுக்கு கொரனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உடனுக்குடன் செய்தி அளிக்கும் ஊடகத்துறையினருக்கு நன்றி, இவ்வாறு மோடி தனது உரையில் கூறினார்.