இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி! சென்னை சேப்பாக்கத்தில் குவியும் ரசிகர்கள் கூட்டம்!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.


இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. 

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மாயக் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்டுள் தகூர் அணியில் இடம் பெற்றுள்ளார். 

பகலிரவு ஆட்டமாக நடக்கும் இந்த போட்டி மதியம் 1:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது