இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டி20 போட்டி! பதிலடி கொடுக்க காத்திருக்கும் நியூசிலாந்து! வெற்றிப் பாதையை தொடருமா இந்திய அணி?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி இன்று நடைபெற உள்ளது.


இந்திய அணி நியூசிலாந்துடன் ஒருநாள் போட்டி ,டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, டி20 போட்டிகளில் விளையாட அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லேண்டில் நடைபெற உள்ளது.

கடந்த டி20 போட்டியில் இந்திய அணி பந்து வீச்சில் சுமாராக செயல்பட்டாலும் பேட்டிங்கில் பட்டையை கிளப்பியது. கடைசி போட்டியில் கீப்பராக செயல்பட்ட லோகேஷ் ராகுல் அரை சதத்தையும் விளாசினார். ஆகவே இந்த போட்டியில் ரிஷப் பண்ட் இடம்பெறுவது கடினம் என்று தெரிகிறது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த போட்டியில் நியூஸிலாந்து அணி தோல்வியை தழுவியதால் இந்த போட்டியில் வெற்றிபெற அந்த அணி தீவிரம் காட்டும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.