இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி! இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய முக்கிய வீரர்கள்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.


தென்ஆப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று தரம்சாலாவில் நடைபெற உள்ளது. 

இந்திய அணியை பொறுத்தவரை காயம் காரணமாக கடந்த ஒரு சில தொடர்களில் விளையாடாமல் இருந்த ஆர்டிக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் உடற்தகுதி பெற்று மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகாத காரணத்தினால் ரோகித் சர்மா இந்த தொடரில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நண்பகல் 1:30 மணிக்கு தரம்சாலா மைதானத்தில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.