இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணி அபார பந்துவீச்சு! சுருண்டது பங்களாதேஷ் அணி!

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே இந்திய அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் பங்களாதேஷ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அந்த அணியின் ரஹீம் அதிகபட்சமாக 41 ரன்களை எடுத்தார். இதனால் பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சமி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா 43 ரன்களுடனும் , மயங்க் அகர்வால் 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.