பறிபோகும் நிதி அமைச்சர் பதவி! நிர்மலா சீதாராமனை கட்டம் கட்டும் மோடி! டெல்லி பரபரப்பு!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகப்பெரிய சரிவை நோக்கி போய்கொண்டு இருக்கிறது.


கடந்த 2018-19 நிதியாண்டில் 6.8%ஆக குறைந்துவிட்டது. இதனால் சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதி பிரட்சினை சிக்கலாகிக் கொண்டிருக்கிறது.கடன் சுமையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.உருக்கு துறையும்,வாகன உற்பத்தி துறையும் பெரிய வீழ்ச்சியை சந்தித்து இருக்கின்றன. ஜாம்ஷெட்பூரில் மட்டு 32 உருக்காலைகளில் கதவடைப்பு நடந்திருக்கிறது.

பிரபல ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஆட்குறைப்பு துவங்கிவிட்டது. சுசூக்கி, டொயோட்டா,டி.வி.எஸ் லோட்டஸ் நிறுவனங்கள் வெளிப்படையாகவே அறிவித்து விட்டன.ரியல் எஸ்டேட் கடந்த சில ஆண்டுகளாகவே தேக்க நிலையில் இருக்கிறது. வானத்தைத் தொடும் என சொல்லப்பட்ட நேரடி வரி வசூல் 1.4% மட்டுமே அதிகரித்து இருக்கிறது.

ஜி.எஸ்.டி வரி வசூல் உயர்வு 18%  இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது.ஆனல்,ஜூலை வரையான நிதியாண்டில் ஜி.எஸ்.டி வசூல் 9% தான் உயர்ந்திருக்கிறது.வேலை இல்லாத் திண்டாட்டம் 25 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது .இந்த நிலையில் நேற்று கொடியேற்றி முடித்த கையோடு நிர்மலா சீத்தாராமன்,மற்றும் நிதித்துறை அதிகாரிகளைச் சந்தித்தி மோடி ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

இதில் முடிவுகள் ஏதும் எட்டப்படாத நிலையில் மோடி ஒரு புதிய முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. அரசின் அறிவிப்புகள் வெறும் கோஷங்களாகப் போய்விட்ட நிலையில் இந்த பழிகளை சுமத்த நிர்மலாவின் தலைதான் பொருத்தம் என்று முடிவு செய்து விட்டாரம் பிரதமர்.அதனால் , விரைவில் இந்திய நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து நிர்மலா விடுவிக்கப்பட்டு வேறு துறைக்கு மாற்றப்படப்போகிறார்.

இந்தியாவின் அடுத்த நிதியமைச்சராக ப்யூஸ் கோயல் நியமிக்கப் படுவார்.இதற்கு தமிழ்நாட்டில் பிஜேபியை வளர்ப்பதற்காக அதிக பணிச்சுமை உள்ள பதவியை விட்டு நிர்மலா விலகியதாக காரணம் சொல்லப்படுமாம்.