பிரபல நடிகைக்கு ரஜினி தேர்தலில் உதவி செய்கிறார்! அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலத்தில் வருமான வரி சோதனைக்குள்ளான அமைச்சர் ஒருவர் நடிகர் ரஜினி காந்த் உதவியுடன் நடிகை சுமலதா தன்னை பழி வாங்கிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் துரைமுருகன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனைகள் நடைபெறும் நிலையில், இது தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சிகளின் தந்திர மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தள அரசில் அமைச்சராக உள்ள புட்டாராஜு காங்கிரஸ் கூட்டணி சார்பில் மாண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார் அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில் அதற்கு காரணம் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் நடிகை சுமலதாதான் என புட்டாராஜு குற்ற்றம் சாட்டியுள்ளார். 

நடிகை சுமலதா நடிகர் ரஜினிகாந்தின் உதவியுடன் தனது  வீட்டில் வருமானவரித்துறை சோதனையை ஏவி விட்டதாகவும், நடிகர் ரஜினி காந்த் தனது பா.ஜ.க. செல்வாக்கை பயன்படுத்தி நடிகை சுமலதாவுக்கு உதவி செய்திருப்பதாகவும் புட்டாராஜு கூறியுள்ளார். சுமலதாவின் கணவரான மறைந்த நடிகர் அம்பரீஷ் ரஜினியின் நண்பர் என்ற வகையில் சுமலதாவுக்கு ரஜினி காந்த் உதவி செய்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரபரப்புகளில் இருந்து ஒதுங்கியிருக்கும் நடிகர் ரஜினி காந்த் தனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பைத் தொடங்கும் பணிகளில் மூழ்கியிருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.