முன்கோபம் ஜாஸ்தியா? உங்க ஜாதகம் இப்படித்தான்.

செவ்வாய் கிரகத்தை பலரும் கடவுளாக வணங்குகின்றனர். அவ்வாறு வணங்கினால் தைரியமும், அரச சபையில் பேசும் ஆற்றலும் மற்றும் போரில் வெற்றியும் கிடைக்கும்.


இவருக்கு சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்பிரதன், லோகிதாங்கன், ரத்தாயதேஷணன், ரத்தர்ணன், ஹோமகுண்டலி, ரோகநாசனை, ரக்தவஸ்ரன் என்ற பிற பெயர்களும் உண்டு. ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால் அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார்.

லக்னத்தில் செவ்வாய் நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு பொருட்சேர்க்கை உண்டாகும். குணநலன்கள்: முன்கோபம் உடையவர்கள். சுயநலமான சிந்தனைகளை கொண்டவர்கள். பிடிவாத குணம் உடையவர்கள். தற்புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள். விடாமுயற்சியை உடையவர்கள். சிலருக்கு அடிக்கடி உடலில் காயங்கள் ஏற்படும்.

வம்பு வழக்குகளில் விருப்பம் கொண்டவர்கள். சலனபுத்தி கொண்டவராக இருக்கக்கூடியவர்கள். எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள். சிறு விஷயங்களுக்கு கோபப்படும் குணம் கொண்டவர்கள். சூடான உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள். சிறிய விஷயத்தை பெரியதாக எடுத்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.