டேய் பிரியாணி எங்கடா? கட்டிப்புரண்ட காங்கிரசாரின் மண்டை உடைந்தது!

காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், பிரியாணிக்காக அடித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாடு முழுவதும், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிஜ்னோர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.  இதில், பங்கேற்ற அனைவருக்கும் முன்னாள் எம்எல்ஏ மவுலானா ஜமீல் என்பவரின் வீட்டில் வைத்து பிரியாணி வழங்க உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

அவரது வீடு முசாபர்நகரில் உள்ளது. இதன்படி,  தொண்டர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அப்போது, இரு தரப்பினர் இடையே, பெரும் தள்ளுமுள்ளு நிகழ்ந்துள்ளது. இது ஒருகட்டத்தில் மோதலாக மாறவே, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள தொடங்கியுள்ளனர். இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். 

பின்னர், அடிதடியில் ஈடுபட்டவர்களில், 9 பேரை போலீசார் கைது செய்தனர். முசாபர்நகர் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல கோஷ்டிகள் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அவர்களில் சிலர்தான்,

இப்படி பிரியாணிக்காக சண்டையிட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.