வாரத்திலுள்ள ஏழு நாட்கள் ஒவ்வொரு தெய்வத்தின் உபாசனைக்கு உகந்த நாட்களாகும்.
வாரத்தின் ஏழு நாள்! என்னென்ன கிழமை என்னென்ன நிறத்தில் ஆடை அணிய வேண்டும்?
ஒரு குறிப்பிட்ட நாளின் சூழலில் அந்நாளுடன் சம்பந்தப்பட்ட தெய்வ தத்துவம் அதிக
அளவில் செயல்பாட்டில் உள்ளது. பண்டிகை, உற்சவம் மற்றும் விரதம் போன்றவற்றிற்கும் இது
பொருந்தும். அந்நாளில் அத்துடன் சம்பந்தப்பட்ட தெய்வ தத்துவம் அதிக அளவில் செயல்பாட்டில்
இருக்கும். அந்த தெய்வ தத்துவத்துடன் நெருங்கிய தொடர்புடைய நிறம் கொண்ட ஆடையை அணிந்து
கொள்வதால் சம்பந்தப்பட்ட தெய்வ தத்துவம் அதிக அளவில் ஆகர்ஷிக்கப்படுகிறது. சாதாரணமாகவே
இது போன்று ஆடை அணிபவர்களுக்கு தெய்வ தத்துவங்களின் பயன் அதிக அளவு கிடைக்கிறது.
ஞாயிறு ; சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு
திங்கள் ; வெண்மை, சில்வர், ஊதா
செவ்வாய்; சிவப்பு, பிங்க், ஆரஞ்சு
புதன் ; பச்சை
வியாழன் ; மஞ்சள்
வெள்ளி ; கடல் நீலம், வெண்மை
சனி ; கருப்பு
வாரத்தின் முதல் நாளான ஞாயிறு, கோள்களின் நடுவில் வீற்றிருக்கும் நாயகனான சூரியனுக்குரியது. சூரியதேவனின் அருள் பெற சிவப்பு நிறத்துடன், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறமும் அணியலாம்.
சந்திரனுக்கு உரிய நாள், திங்கள். வெண்மை மற்றும் சில்வர் நிறங்களில் ஆடை அணிந்தால் அவர் ஆசி கிடைக்கும். மேலும், இது சிவனுக்கு உரிய நாளாகவும் விளங்குகிறது என்பதால், ஊதா நிறமும் சுபம் தரும்.
செவ்வாய் கிரகத்திற்கு உரிய நிறங்களான சிவப்பு மற்றும் பிங்க் நிறத்தில் செவ்வாய்க் கிழமைகளில் ஆடைகள் அணியலாம். மேலும், ஆரஞ்சு நிறத்திலும் அணியலாம்.
‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். அந்தளவுக்கு ராசியான கிழமை இது. பகவான் புதனுக்குரிய இந்தக் கிழமையில், பச்சை ஆடை உடுத்தி அவரின் அனுக்ரஹம் பெறலாம். மேலும் புதன் வாழ்க்கையில் சமநிலையை, அமைதி மற்றும் மகிழ்ச்சியை வழங்கும் கோளாகும். இது நரம்புகளையம், மனதையும் அமைதிப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் இதய நோயாளிகள் இந்த நிறத்தை அடிக்கடி அணிவது நல்லது.
வியாழன், குருவுக்குரிய நாள். மஞ்சள் ஆடை உடுத்தி குருவையும், இந்நாளின் தெய்வமான லஷ்மியையும் வழிபட, மங்களம் பெருகும். இது உங்கள் வாழ்வில் நேர்மறை ஆற்றலை வழங்குவதுடன், நரம்பு மண்டலங்களை பராமரிக்க உதவுகிறது.
சுக்ரனின் ஆதிக்கக் கிழமை, வெள்ளி. கடல் நீல நிறத்திலும், வெண்மை நிறத்திலும் ஆடையுடுத்தி, குரு வையும், லஷ்மியையும் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளைப் பூக்களால் வழிபட்டால் ஞானமும், செல்வமும் வளரும்.
சனிபகவானுக்குரிய கிழமை,
சனி. இந்தக் கிழமைகளில் அவரின் இஷ்ட நிறமான கருப்பு நிறத்தில் ஆடை கள் உடுத்தி, அவர்
தரும் கஷ்டங்களில் இருந்து விடுதலை பெற்று, வளம் பெறலாம்.