தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி தான் அடுத்ததும்! ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு பூஜை

தமிழகத்தில் நடந்துவரும் நல்லாட்சி அடுத்துவரும் தேர்தலிலும் தொடர வேண்டும், மூன்றாவது முறையாக தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையவேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு யாகமும், பூஜையும் நடத்தப்பட்டுள்ளது.


அதிமுகவின் இளைஞர் பாசறை மாநில துணைப்பொதுச்செயலாளராக இருக்கிறார், கோவையை சேர்ந்த விஷ்ணு பிரபு. இவர் கடந்த 23ம் தேதி கோவையில் இருந்து வாடகை ஹெலிகாப்டரில் ஸ்ரீவில்லிப்புத்தூருக்குச் சென்றார். தனது குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்றார்.

ஆண்டாள்கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் எதிரிகளை சமாளித்து வெற்றி தரக்கூடிய சுதர்சன ஹோமம் என்னும் சிறப்பு ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளை ஒரு மணி நேரம் செய்தார்.

அதன்பிறகு ’ தமிழகத்தில் 3வது முறையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று சிறப்பு பூஜைகள் செய்திருக்கிறோம். ஆண்டாளின் அருளுடன் ஆட்சி அமையும்’ என்று தெரிவித்துள்ளார்.