தொட்டதெல்லாம் பொன்னாகும்..! பண வசியம் செய்யும் அபூர்வ மஞ்சள்! எங்கு கிடைக்கும் தெரியுமா?

மஞ்சள் வகைகளிலே அபூர்வமாக கிடைக்ககூடியதான ஒன்று தான் தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கருமஞ்சள் ஆகும்


வட மாநிலங்களில் பல குக்கிராமங்களிலும் இன்றும் இது தன வசியத்திற்க்கு அன்றாடம் பலரால் உபயோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாய் நாட்டு மருந்துகள் விற்பனை செய்து வருவோருக்கு கூட இது பற்றி தெரியாதது ஆச்சரியமே. முன்பு இவை கிடைப்பது மிக அரிது. இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை, மத்திய பிரதேசம் மற்றும் நேபாள், இந்தோனேசியா பகுதியில் விளைபவை ஆகும்.

இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது. ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருமஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும்.

பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம். சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் இதை நடு விரலில் ஊசியால் குத்தி அதன் ரத்தத்தில் இதை குழைத்து நெற்றியில் இட்டு செல்கின்றனர். வராத பணமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

பல அரிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது கருமஞ்சள். கருமஞ்சளின் மருத்துவ குணங்களை பார்க்கும்போது எட்ஸ், கேன்சர், ஆஸ்துமா உள்ளிட்ட கொடிய நோய்களை குணப்படுத்த கூடியது, தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சளில் காளியும், பைரவரும் வசிக்கிறார்கள் என்று சாஸ்திரங்கள் உரைக்கின்றன.

இந்த கரு மஞ்சளை சிவப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்திருந்தால் நாம் செய்யும் செயல்களில் எல்லாம் எதிர்பாராத வெற்றிகளை கொடுக்கும், வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்களை கொடுக்கும், எதிர்பாராத தன வரவுகளையும் பொருள் வரவுகளையும் உண்டாக்கும், இதுவரை வெளியில் கொடுத்து திரும்பி வராத பணம் திடீரென எதிர்பாராமல் நல்லபடியாக வந்து சேரும், அற்புதமான முன்னேற்றத்தையும் பண வரவுகளையும் தருவதால் வியாபாரிகள் கட்டாயம் அணியவேண்டியது கருமஞ்சள் ஆகும்.

வாழ்வில் எதிர்பாராத வெற்றிகளை கருமஞ்சள் பெற்றுத்தரும். ஆகையால் வாழ்வில் வெற்றியையும் முன்னேற்றத்தையும் விரும்பும் அனைவரும் கருமஞ்சள் அணியலாம். சிவப்பு பச்சை கலந்த பட்டுத் துணியில் கருமஞ்சள் வைத்து பணப் பெட்டியில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும்.

குபேர தன ஆகர்ஷண 3 ஆம் கட்ட பயிற்சியில் தொட்டதெல்லாம் பொன்னாக்கும் பண வசியம் செய்யும் கருமஞ்சள் செடி காப்பு கட்டி தரப்படுகிறது. தன வசிய கருமஞ்சள் மூலிகையை கார்த்திகை மாத பௌர்ணமி அன்று காப்புக்கட்டி எடுப்பது விசேஷமானது அதிக பலன்களை தருவது எனவே வருடத்திற்கு ஒரு முறை வரும் கார்த்திகை மாத பௌர்ணமி அன்று 33 ரகசிய குபேர மூலிகைகளுடன் தரப்படுகிறது

கருமஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும். இதை தாந்த்ரீக வழிமுறைகளில் பல விஷயங்களுக்கு உபயோகப்படுத்துவதுண்டு. இதை காளியின் அம்சம் கொண்டதாக கூறுவது வழக்கம். மேலும் பைரவர் உபாசணைக்கும் பயன்படுத்தலாம். இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர் மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது.

கோர்ட்டுகளில் வழக்குகளை சந்தித்து வருவோருக்கு மிக முக்கியமான பாதுகாவலாகவும் வெற்றியை தேடி தரும்ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. வீட்டில் சதா சண்டை சச்சரவு தம்பதிகளுக்குள் நிகழ்ந்து வந்தால், இருவரும் இதை முகத்தில் அரைத்து தேய்த்து வந்தால், சச்சரவுகள் தீரும்- அதாவது மிக முக்கியமாக இது ஜனவசியம் செய்யக்கூடியதுஆகும். ஆனால் பலர் இதை தன வசியத்திற்காகவே உபயோகப்படுத்துகின்றனர்.