உங்கள் பெயர் நியூமராலஜி படி சரியாக இருக்கிறதா? மாற்றிப் பாருங்கள், அதிர்ஷ்டம் கொட்டும்!

ஜோதிடம் என்பது கடல் போன்றது. அதில் கணக்கில் அடங்கா பலன் கூறும் வழி முறைகள் உள்ளது. மிகவும் புராதன காலம் தொட்டே ஜோதிடம் மற்றும் வானவியல் சாஸ்திரங்கள் உள்ளது.


ஜோதிடம் என்பது நாம் பிறக்கும் பொது உள்ள கிரக நிலைகளை வைத்து நம்முடைய வாழ்வில் நடைபெறும் பலாபலன்களை கூறும் ஒருகலையாகும். இந்த ஜோதிட அறிவியலை நமது பழங்கால ஞானிகளும் சித்தமகா முனிவர்களும் வழிவழியாக அறிந்து வைத்து இருந்தார்கள். அதன் ஒரு பிரிவாக 'சப்த ஒலி சாஸ்திரம்' இருந்து வருகிறது. 

அந்த சப்த ஒலி சாஸ்திரங்களே, இன்றைய நியுமராலாஜி எனும் எண்கணிதம் என்ற பெயரில், உலகம் முழுதும் உள்ள மக்களால் பின்பற்றப்படுகின்றது. அதிர்ஷ்ட பெயர் மூலமாக ஒவ்வொருவரும் நல்ல அதிர்ஷ்டமான வாழ்வினை வாழமுடியும். மேலும் இன்று பொறியியல் பட்டதாரிகள் எண்களின் ஆற்றலை வைத்துத்தான் அழகான வீடுகளை அமைத்து இருக்கிறார்கள். 

இதற்கு முன்னோடியாகத் திகழ்பவர் கணிதமேதை பிதகோரஸ். இவர் எண்களின் ஆற்றலை கொண்டு பிரபஞ்ச சக்தியின் அளவை அறியலாம் என்றார். இதே வரிசையில் விஞ்ஞானி கீரோ எண்களால் நலம் பெறும் ஜோதிடத்தைக் கொண்டு வந்தார்.  ஒரு நாளின் மணி, நிமிடம், நொடி என்று அனைத்துமே எண்களின் அடிப்படையில் இயங்குகிறது. 

பிறந்த தேதி எண், மாதம், ஆண்டு ஆகியவற்றின் கூட்டி வருகிற எண், பெயரில் உள்ள எழுத்துக்கள் இவற்றைக் கூட்டி வரும் எண் இவற்றிற்கு உள்ள மதிப்பு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மேற்சொன்ன எண்களுக்கு உரிய கிரஹங்களே மனிதரின் வாழ்க்கை ஓட்டத்தை நிர்ணயிக்கிறது என்ற விதியை வைத்து பலன் பெறச் செய்தார்கள். இது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. எண்களுக்கு அதிக சக்தி இருப்பதாகவும், அவை வாழ்வில் முன்னேற்றங்களைத் தருகிறது என்றும் மேலைநாட்டு நியூமரோ வல்லுநர்கள் நிரூபித்துள்ளார்கள்.