'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்றார் ஒரு புலவர். ஒரு வலிமை வாய்ந்த அரசனின் மனநிலையே கலங்கும் அளவிற்கு கடன் பட்டவரின் மன வேதனை இருக்கும் என்பதே இதன் உவமை.
கடன் தொல்லை தாங்கமுடியவில்லையா? உங்க வீட்டு அமைப்பு இப்படி இருக்கான்னு பாருங்க!

ஒருவர் கடன் சுமைக்கு ஆளாவதருக்கு அவருடைய வீடு வாஸ்து சாஸ்திரத்தில் ஏதேனும் தொடர்புண்டா என்பதைப் பற்றி பார்ப்போம். பல பேர், நான் இந்த இடத்திற்கு அலுவலகத்தை மாற்றிய பிறகுதான் கடன் வந்தது என்றும், நான் இடத்தை வாங்கிய பிறகுதான் கடன் வந்தது என்றும், நான் இந்த கட்டிடத்தை கட்ட ஆரம்பித்த பிறகுதான் எனக்கு கடன் வந்தது என்றும் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
வாஸ்துபடி எந்தெந்த அமைப்பால் கடன் சுமை ஏற்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம். வீட்டின் தென்மேற்கில் மாஸ்டர் பெட்ரூம் தவிர மற்ற அமைப்புகள் வருவது. தென்மேற்கு பகுதியில் ஆறு, ஓடை, குளம், குட்டை, கிணறு, ஆழ்துளைக்கிணறு, மலக்குழி போன்ற பள்ளமான அமைப்புகள் வருவது.
தென்மேற்கில் தலைவாசல் அமைப்புகள் வருவது. தெற்கு காலியிடம் அதிகமாகவும், வடக்கு காலியிடம் மிக மிக குறைவானதாகவும் உள்ள அமைப்பு. நம்முடைய இடத்திற்கு தெற்கு மற்றும் மேற்கில் உள்ள இடத்தை விலைக்கு வாங்குவது. தென்மேற்கில் தெருக்குத்து, தெருப்பார்வை போன்ற அமைப்புகள் வருவது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ரோடு உயரமாகுதல், மேம்பாலம் வந்துவிடுதல். வடக்கு முழுவதும் மூடிய அமைப்பு, வடக்கு மற்றொருவருடைய கட்டிடத்தில் சேர்ந்த அமைப்பு.
வடமேற்கில் பள்ளமான அமைப்புகளான கிணறு, ஆழ்துளைக்கிணறு, தரைக்குகீழ் தண்ணீர் தொட்டி போன்றவைகள் வருவது. வடமேற்கில் வளர்ந்த கட்டிட அமைப்புகள் வருவது. வீட்டின் தவறான படி அமைப்புகள். தவறான மேற்கூரை (High Ceiling) அமைப்புகள்.
கொடுக்கல், வாங்கலில் நாணயம் இழந்த நபர்களின் வீட்டு அமைப்பும் மேலே குறிப்பிட்ட சில அமைப்புகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்று அமைந்திருக்கும். வாஸ்துபடி வீட்டில் இதுபோன்ற அமைப்புகள் வரும்போது கடன் சுமை ஏற்படும்.