கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் பணம் கேட்கிறாரா உங்கள் டெலிவரி மேன்..! நீங்கள் செய்ய வேண்டியது உள்ளே..!

கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் ரசீதில் இருப்பதை விட கூடுதலாக பணம் கேட்டால் புகார் அளிக்கலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அதிரடியாக தகவல் வெளியிட்டுள்ளது.


கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் போது ரசதில் குறிப்பிட்ட விலையை விட அதிகமாக வசூல் செய்பவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது. பொதுவாகவே சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து 30 ரூபாய் முதல் 100 ரூபாய்  வரை பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

ஒருவேளை வாடிக்கையாளர் அந்த குறிப்பிட்ட தொகையை தர மறுத்தால் சிலிண்டர் விநியோகிப்பவர்கள் சண்டை இடுவதையும் தங்களது வழக்கமாக கொண்டுள்ளனர். ஆகையால் இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் சிலிண்டருக்கு குறிப்பிட்ட தொகையை விட கூடுதலாக பணம் வசூலிப்பவர்கள் மீது வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கலாம் . மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.