அபிநந்தனை மட்டும் பாகிஸ்தான் விடுவிக்காமல் இருந்திருந்தால்..! பிரதமர் மோடி வெளியிட்ட செமத் தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் பதான் என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் ஆக்ரோஷமாக உரையாற்றினார்.


உரையில் அவர் பாலக்கோடு  தாக்குதல் பற்றி பேசினார். அபிநந்தனை விடுவிக்காமல் இருந்தால்  எண்ணற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை எச்சரித்ததாக கூறினார். அபிநந்தன் பிடிக்கப்பட்ட காலத்தில் எதிர்க்கட்சியினர் தன்னிடம் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்று வினவியதை நினைவுக்கூர்ந்தார்.  

பாலக்கோடு தாக்குதலின் இரண்டாம் நாளில்,  ஒரு அமெரிக்க அதிகாரி " மோடி 12 ஏவுகணைகளை தயார் செய்து வைத்திருந்ததாகவும், அபிநந்தனை விடுவிக்க இல்லையென்றால் பாகிஸ்தான் கடும் விளைவுகளைச் சந்தித்திருக்கும்" என்று  கூறியதை நினைவுபடுத்தினார். மேலும் வேறு ஒரு நிகழ்வில் இதைப்பற்றி விரிவாகப்பேசலாம் என்றார்.

NCP- கட்சியின் தலைவரான சரத் பவாருக்கே நான் என்ன செய்யப்போறேன் என்று தெரியவில்லை என்றால் , பாகிஸ்தான் பிரதமருக்கு எவ்வாறு தெரியும் என்று கிண்டலடித்தார். 26 மக்களவை தொகுதிகளிலும் பாஜகவை  வெற்றிபெறச்செய்யுங்கள் இல்லையென்றால் ஊடகங்கள் கேள்விக்க்கேட்கும் என்று நகைத்தார்.