இந்தியா – பாக்., மக்களின் இதயங்களை இணைத்த மாவீரன் அபிநந்தன்!

அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் பாகிஸ்தான் அதிபர் இம்ரானுடைய புகழ் உச்சத்தைத் தொட்டுள்ளது.


வாகா _ அட்டாரி எல்லையில் அபிநந்தன் அழைத்துவரப்பட்டார். இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தனுக்கு முறையாக மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுஇந்தியார்கள் மனதில் இருந்த பெரும் சுமை நீங்கியுள்ளது.


இதற்கு காரணமான இம்ரான் கானுக்கு இந்திய மக்கள் மனதார நன்றி சொல்கிறார்கள்ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக இம்ரான்கானை இந்திய மக்கள் நன்கு அறிவார்கள். எதிர் நாடாக இருந்தாலும், நல்ல வீரர்களை இந்தியர்கள் கொண்டாடுவார்கள் என்பது இம்ரானுக்கும் தெரியும்.

 

அதேபோன்று பாகிஸ்தான் மக்களும் இந்திய வீரர்கள் நன்றாக விளையாடும்போது பாராட்டுவார்கள். ஆரம்பத்தில் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒரே நாட்டு மக்கள்தான். அதனால், இரண்டு நாட்டு மக்களும் நல்லவர்கள்தான்.

 

இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திற்கும் பயணம் செய்திருக்கும் இம்ரான் பாகிஸ்தான் தலைமைப் பொறுப்பில் இருப்பதால்தான், அபிநந்தன் விவகாரத்தை இத்தனை நல்லெண்ண அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுவே முந்தைய அதிபர்கள் யாரேனும் இருந்திருந்தால், அபிநந்தனை நீதிமன்றத்தில் நிறுத்தி, அதிரடி விசாரணை நடத்தி கடுமையான தண்டனைக்கு ஆளாக்கியிருப்பார்கள்.

 

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கேட்டுக்கொண்ட பிறகுகூட விடுதலை செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே பேச்சுவார்த்தைக்கு இம்ரான்கான் தயாராகவே இருப்பதால், அவருக்கு இந்தியாவில் மதிப்பும் மரியாதையும் கடகடவென உயர்ந்துள்ளது.

 

தேர்தல் நேரத்தில் எசகுபிசகாக எதையாவது செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அரசியலாக்காமல் ரொம்பவும் பிகு செய்யாமல் விடுதலை செய்திருக்கிறார்.

 

அதற்காகவே இம்ரானுக்கு நன்றி தெரிவிப்போம். அபிநந்தன் விவகாரத்தில் தொடங்கி இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பு நாடாக இருப்பது நம் பொருளாதாரத்துக்கும், மக்களுக்கும் பெரும் நன்மை பயக்கும்.

 

அதுமட்டும் அல்ல அபிநந்தனை விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானிலும் அந்நாட்டு மக்கள் வீதிக்கு வந்தது இரண்டு மக்களின் இதயத்தையும் இணைத்துள்ளது. அதாவது இந்திய மக்களின் இதயத்தை நம் அபிநந்தன் இணைத்துள்ளார்.