இந்தியர்கள் வேலைக்கு வேண்டாம்..! திடீர் தடை போட்ட அமெரிக்க இந்திய ஐடி நிறுவனங்கள்! அதிர்ச்சியில் ஊழியர்கள்!

மும்பை: இந்தியர்களை பணிக்கு அமர்த்த ஐடி நிறுவனங்கள் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக, தெரியவந்துள்ளது.


இந்தியாவைச் சேர்ந்த ஐடி நிறுவனங்கள் பலவும்  அமெரிக்காவில் கிளை நிறுவி செயல்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெளிநாட்டினருக்கு புதிய விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்காரணமாக, அங்குள்ள இந்திய நிறுவனங்கள், அமெரிக்க குடிமகன்களை அதிகளவில் பணியமர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  

சட்ட ரீதியான பிரச்சனைகள் காரணமாக, அமெரிக்காவில் உள்ள தங்கள் கிளைகளுக்கு, இந்திய குடியுரிமை பெற்றவர்களை பணி அமர்த்த வேண்டாம் என, இந்திய ஐடி நிறுவனங்களே புதிய உத்தரவிட்டுள்ளன. இதற்கேற்ப, 2023ம் ஆண்டிற்குள், இன்ஃபோசிஸ் நிறுவனம், 1000 அமெரிக்கர்களை புதியதாக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, 10,000 அமெரிக்கர்களை இந்நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. இதேபோல, டிசிஎஸ் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவில் 30,000 அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு பணி அளிக்கப்பட்டுள்ளது. காக்னிசன்ட், ஹெச்சிஎல் நிறுவனங்களும் இதே நடைமுறையை பின்பற்றுவதாகக் கூறியுள்ளன. 

இதனால், ஐடி வேலை, அமெரிக்காவில் ஒரே ஆண்டில் செட்டில் ஆகிவிடலாம் என்ற, இந்திய இளைஞர்களின் கனவு படிப்படியாக சரிய தொடங்கியுள்ளது.