சூடுபிடிக்கும் IPL : இன்றைய போட்டிகளின் விவரங்கள் இதோ!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசேர் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ளது.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக போன வருடம் முதல் நியமிக்கப்பட்டார். சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் , தினேஷ் கார்த்திக் அணியை எதிர்கொள்ளவுள்ளார்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர் ஹைதராபாத் ஆகிய இரண்டு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

 

மற்றொரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது . ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

இன்று விளையாட உள்ள நான்கு அணிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மட்டும் கோப்பையை இது வரை வெல்லவில்லை. இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்த அணியில் இளம் அதிரடி வீரர் ரிஷாப் பாண்ட் உள்ளார். இதனால் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது