அஸ்வினின் ராஜதந்திரம் இன்றைய போட்டியில் தொடருமா? KKR அணியுடன் பலப்பரீட்சை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ipl போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் போட்டியில் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியை வென்றது.

கிங்ஸ் XI பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது.

இந்த இரு அணிகளும் தனது முதல் போட்டியில் வென்ற உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களமிறக்கவுள்ளது. இதனால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணியில் ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி முதல் போட்டியில் வெற்றி பெற காரணமாக திகழ்ந்தார்.

அதே போல கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி முதல் போட்டியில் ரன்களை குவித்தார்.

 இந்த இரு வீரர்களையும் எப்படியாவது வீழ்த்தவேண்டும் என்பதே எதிரணியின் குறிக்கோளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டு அணியிலும் தமிழக வீரர்கள் கேப்டனாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.