கொரோனாவை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் வாட்ச் போன்ற கருவி..! உலகை திரும்பி பார்க்க வைத்த சென்னை ஐஐடி மாணவர்கள்! எப்படி தெரியுமா?

ஐஐடி மெட்ராஸ் இன்குபேட்டட் மியூஸ் வியரபள் கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள கையில் கட்டிக் கொள்ளும் வாட்ச் போன்ற ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர்.


இந்த கருவியானது நமது உடலில் உள்ள ஸ்கின் டெம்பரேச்சர், இதயத்துடிப்பு மற்றும் ரத்த ஆக்சிஜன் செறிவு போன்றவற்றை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. ப்ளூடூத் வசதியுடன் இயங்கும் இந்த கருவியானது மியூசிக் ஹெல்த் ஆப் என்ற செயலியின் மூலம் மொபைல் உடன் இணைத்து கொள்ளலாம். இந்த கருவியின் மூலம் உடலிலுள்ள ஸ்கின் டெம்பரேச்சர், இதயத்துடிப்பு மற்றும் ரத்த ஆக்சிஜன் செறிவின் அளவு போன்றவை நமது மொபைல் போன் மற்றும் ரிமோட் சர்வரில் சேமித்து வைக்கப்படும். 

மேலும் இந்த கருவியில் ஆரோக்கியா சேது செயலியின் மூலம் கொரோனா சம்பந்தப்பட்ட தகவல்களை நாம் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த கருவியை நாம் கையில் அணிந்து கொண்டு கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள கண்டைன்மெண்ட் ஜோனுக்குள் நுழையும் போது ஆரோக்கியா சேது செயலின் மூலம் நமக்கு உடனடியாக அலர்ட் தகவல்கள் கிடைத்து விடும்.

இந்த கருவியின் மூலம் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனடியாக நாம் அறிந்து கொள்வதோடு அந்த தகவல்கள் அனைத்தும் ரிமோட் சர்வரில் ஸ்டோர் ஆகிவிடும். இதன் மூலம் கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து அதற்கான சிகிச்சைகளை நாம் உடனடியாக பெற ஆரம்பிக்கலாம். இந்தக் கருவியின் டிசைன் பணிகள் முடிந்து விட்டதாகவும் இறுதிகட்ட பணிகள் மட்டும் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருகிற ஜூன் மாதம் இந்த கருவியானது சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கருவியின் விலை சுமார் 3,500 ரூபாயாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.