வேலை கேட்டுச் சென்ற மாணவியுடன் செக்ஸ் உறவு! ஐஐடி பேராசிரியருக்கு பிறகு நேர்ந்த பரிதாபம்!

வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னை பலாத்காரம் செய்தார் என்று ஐஐடி பேராசிரியர் மீது பெண் ஒருவர் செக்ஸ் புகார் கூறியுள்ளார்.


ஐஐடி ஜோத்பூர் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரியும்  விவேக் விஜய் வர்கியா என்பவரிடம் ஒருவரிடம், குறிப்பிட்ட பெண், வேலை கேட்டுள்ளார். அந்த பெண் ஐஐடி ஜோத்பூரில் படித்துவிட்டு அங்கேயே தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளார்.

அவருக்கு நிரந்தர வேலை தருவதாகக் கூறி, நொய்டாவில் உள்ள தனது விருந்தினர் மாளிகைக்கு, பேராசிரியர், அப்பெண்ணை ரெஸ்யூம் எடுத்துவரும்படி, தனிமையில் அழைத்துள்ளார். அந்த பெண் அங்கே சென்றபோது, பேராசிரியர் அத்துமீறியதோடு, பலாத்காரமும் செய்திருக்கிறார்.

இதன்பேரில், பாதிக்கப்பட்ட பெண் நொய்டா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவு இருப்பதால், இந்த விவகாரத்தில் போலீசார் மேலும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

ஒருவேளை வேறு ஏதேனும் காரணங்களுக்காக, அந்த பெண், ஐஐடி பேராசிரியர் மீது புகார் கூறுகிறாரோ என்ற சந்தேகமும் உள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஐஐடி பேராசிரியர் மீது எழுந்துள்ள செக்ஸ் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் பேராசிரியர் விவேக் விஜய் வர்கியா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.