மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்து கடமையை செய்த அதிகாரி! தனி ஆளாக தவிக்கும் அவலம்!

"இருளில் தனியாகப் போராடுகிறேன்," என்று பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கூறியுள்ளார்.


கர்நாடகா பிரிவு ஐஏஎஸ் அதிகாரி முகமது மோஸின். இவர், கடந்த 16ம் தேதி மோடி ஒடிசா மாநிலம் சென்றபோது, தேர்தல் சோதனைப் பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது, தேர்தல் விதிமுறைகளுக்கு உள்பட்டு, மோடியின் ஹெலிகாப்டரையும் முகமது மோஸின் சோதனை செய்தார்.

இதனால், தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில், மோடிக்கு 15 நிமிடம் தாமதமானதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில், அவரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, தற்போது மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். தேர்தல் விதிமுறைகளுக்கு உள்பட்டே மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்டதாகவும், இதில் எந்த தவறும் இல்லை என்பதால், தனது பணியிடை நீக்கம் செல்லாது என உத்தரவிடவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இருளில் எனக்காக நானே போராடி வருகிறேன் என்றும் அவர் வேதனைபட தெரிவித்துள்ளார். தனக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்பதையே அவர் இப்படி கூறியுள்ளார்.