இல்லை என்னால் அதில் உட்கார முடியாது..! பிடிவாதம் காட்டிய மோடி! வெளிறிப்போன அதிகாரிகள்! ரஷ்ய பரபரப்பு!

தனக்கென அலங்கரிக்கப்பட்டிருந்த ஆடம்பர சோஃபாவை பிரதமர் மோடி நிராகரித்த சம்பவமானது ரஷ்ய நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நரேந்திர மோடி அவர்கள் எப்பொழுதும் தன்னை ஒரு எளிமைவாதியாகவே மக்களிடம் முன்னிலைப்படுத்துவார். தன்னுடைய பிரச்சார கூட்டங்களில் "ஏழைத்தாயின் மகன்" என்று மக்களை கவரும் வகையில் வாக்கு சேகரிப்பார். இதனை எதிர்க்கட்சிகள் பலமுறை கிண்டல் அடித்ததும் உண்மை. ஆனால் தான் உண்மையிலேயே எளிமையை விரும்புபவன் என்பதனை ரஷ்ய நாட்டில் மோடி உணர்த்தியுள்ளார்.

பிரதமர் மோடி அவர்கள் தற்போது ரஷ்ய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். விளாடிஸ்வோஸ்டாக் என்ற நகரத்திற்கு அவர் சென்றுள்ளார். அங்குள்ள ரஷ்யா அதிகாரிகளுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டுள்ளார். அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து அவரை வரவேற்றனர்.

குரூப் ஃபோட்டோ எடுப்பதற்காக நாற்காலிகள் அரங்கேற்றப்பட்டு இருந்தன. அது பிரதமர் மோடிக்கு மட்டும் விஐபிகள் அமர்ந்திருக்கும் சோஃபா போன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறைக்கு சென்றவுடன் தனக்கு ஏற்பாடு செய்திருந்த சோஃபாவை மோடி பார்த்துள்ளார்.

அதிகாரிகள் அவரை அமருமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்கு அவர் மற்றவர்களை போன்ற நாற்காலியை எனக்கும் போடுங்கள் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட அதிகாரிகள் மோடியின் எளிமையை பார்த்து வியந்துள்ளனர்.

இந்த சம்பவமானது ரஷ்ய நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.