அவர்களை விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்! சீமான் அதிரடி அறிவிப்பு!

அவர்களையெல்லாம் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்போவதாக தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசியது விவாதப் பொருளாகியுள்ளது.


கடலூர் மற்றும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வடலூரில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்காதவர்கள் யாரும் சாப்பிடவே கூடாது என்றும் சீமான் தெரிவித்தார். இதேபோல் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை என்றால் அப்பல்லோ வைக்கச் சொல்வதாகவும் கலைஞர் உடல்நிலை சரியில்லை என்றால் காவிரி மருத்துவமனைக்கு சென்றதாகவும் சீமான் தெரிவித்தார்.

அப்பல்லோ விற்க பதிலாக அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் ஜெயலலிதா 70 நாட்களுக்கு பதிலாக 7 நாளில் உயிரிழப்பார் என்று சீமான் கூறினார். இதற்குக் காரணம் அரசு மருத்துவமனைகள் தரம் இல்லாமல் இருப்பதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று சட்டம் போடுவோம் என்று சீமான் தெரிவித்தார். மேலும் நாட்டிலிருந்து லஞ்சம் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அவர் கூறினார்.

10 பைசா லஞ்சம் வாங்கினாலும் அவர்களை விஷ ஊசி போட்டு கொலை செய்து விடுவதாகவும் சீமான் தெரிவித்தார். சீமான் இந்த தேர்தல் பிரச்சாரம் தான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.