கலப்பு திருமணத்திற்காக கடத்தி செல்லப்பட்ட இளமதி நீதிமன்றத்தில் ஆஜரான சம்பவமானது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட இளமதி! காதலனை காப்பாற்ற அங்கு அவர் செய்த செயல்! என்ன தெரியுமா?
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள கவுந்தம்பாடி எனும் இடத்தை சேர்ந்த செல்வம் என்பவர் அருகே அமைந்துள்ள குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இவர்களுடைய காதலை நிராகரித்தனர்.
இந்த செய்தியறிந்த அப்போது திராவிடர் கழகத்தினர் சேலம் மாவட்டத்திலுள்ள காவலாண்டியூர் என்னுமிடத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தனர். இதனை குறுக்கு வழி மூலம் தெரிந்து கொண்ட இருவீட்டாரும் ஆட்களை குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பினர்.
ஆனால் ஆட்கள் வந்து சேரும் முன்னரே இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அடியாட்கள் அப்பகுதியிலிருந்த 40-க்கும் மேற்பட்டோர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். திருமணமான அன்றிரவே காதல் ஜோடியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர்.
உடனடியாக திராவிடர் கழகத்தினர் அப்பகுதி காவல்நிலையத்திற்கு சென்று நிகழ்ந்தவற்றை கூறி கடத்தப்பட்ட இளம் ஜோடியை மீட்டு தருமாறு புகார் அளித்தனர். இந்த சம்பவமானது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்த சம்பவம் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது "இளமதி மற்றும் செல்வன் ஒரே மில்லில் பணியாற்றி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இதனிடையே திராவிட கழக தோழர்கள் இந்த கலப்பு திருமணத்தை நடத்தி வைத்தனர்.
பாமக மற்றும் கொங்கு மக்கள் இயக்கத்தின் சார்பில் 100 பேர் திருமண ஜோடியையும், அவர்களுடைய உறவினர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் இளமதியை கடத்தி சென்றுள்ளனர். தற்போது வரை இளமதி எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. பொதுமக்கள் சேர்ந்து காவல்துறையினரிடம் முறையிட்டதால் 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முதலமைச்சர் அதிவிரைவில் இந்த விவகாரத்தில் தலையிட்டு இளமதியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.
இதனிடையே இளமதியின் பெற்றோர், திருமணத்திற்கு காரணமான கொளத்தூர் மணி, செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே நேற்று முன்தினம் திடீரென்று இளமதி மேட்டூர் காவல் நிலையத்தில் தன்னுடைய பெற்றோருடன் சரணடைந்தார். அவருடைய வழக்கறிஞர் அவரை பெற்றோருடன் அனுப்பி வைக்குமாறு வாதிட்டார்.
நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்ட போது, தான் விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை என்றும் நீதிபதியின் முன்னிலையில் இளமதி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், செல்வம் தன்னுடைய மனைவியை கடத்தி விட்டதாக சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், இளமதி அங்கு அழைத்து செல்லப்பட உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவமானது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.