பாகிஸ்தானுக்கு திடீர் ஆதரவு! சானியா மிர்சாவை சீண்டும் இந்திய ரசிகர்கள்! பரபரப்பு காரணம்!

நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்திய பிறகு பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்கின் மனைவியும் இந்திய டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சா ட்விட்டரில் பாகிஸ்தானை புகழ்ந்ததை ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.


நேற்று நடந்த உலகக்கோப்பை ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியினர் தடுமாறி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்தனர். பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி சிறிது தடுமாறினாலும், பாபர் அசாமின் நிதான சத்தத்தாலும், ஹரிஸ் சோஹைலின் அதிரடியான ஆட்டத்தால் கடைசி ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் அணியை பாராட்டும் வகையில் சானியா மிர்சா டுவிட்டரில் பதிவொன்றை செய்திருந்தார். அதில் அவர் சில தினங்களிலேயே, நிலைமை மாறிவிட்டது என்றும் நிச்சயம் அடுத்த சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதியடையும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு இந்திய ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். சானியா மிர்சாவை சமூக வலைத்தளங்களில் வசைபாடியுள்ளனர். இதனால் மனமுடைந்த சானியா மிர்சா பதிலளிக்கும் வகையில் இன்னொரு பதிவினை செய்திருந்தார். 

அதில் அவர் " இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர உறவை கெடுத்து விடாதீர்கள்.சில கிலோமீட்டர்கள் மட்டுமே தொலைவில் உள்ள அண்டை நாடுகளுக்கிடையே தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வராதீர்கள். இறுதியில் கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள்" என்று பதிவு செய்து இருந்தார்.

தாய்நாட்டை மறந்து கணவன் சிறந்த நாட்டிற்கு சானியா மிர்சா ஆதரவளிப்பது ரசிகர்களிடையே பெரும் புகைச்சலை உண்டாக்கியுள்ளது.