ஸ்மார்ட்போன் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம்! அதிரடி ஆஃபர்! எங்கு தெரியுமா?

தமிழ்நாட்டிலுள்ள ஒரு மொபைல் கடையில் ஸ்மார்ட் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற அறிவிப்பு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.


இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏறுமுகமாகவே காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ வெங்காயம் 150 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் இதை வைத்து பல்வேறு விதமான மீம்ஸ்கள் பரவி வருகிறது. அந்த வகையில் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு மொபைல் கடையில் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை உயர்வை உணர்த்தும் வகையில் வைக்கப்பட்ட இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.