தீராத நோய்! வலியால் துடித்த காதல் மனைவி! தாங்கிக் கொள்ள முடியாத ஆசை கணவன் அரங்கேற்றிய விபரீதம்!

மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிர மாநிலத்தின் புனே எனும் இடம் அமைந்துள்ளது.  இந்த கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணினி மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த விருஷாலி என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. 

திருமணத்திற்கு பிறகு விருஷாலி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதற்காக கணேஷ் அவரை பல இடங்களுக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். ஆனால் அவை எதுவும் பயனளிக்கவில்லை. மேலும் சிகிச்சையின் போது விருஷாலி வலியில் துடித்துள்ளார். தன் மனைவி சந்திக்கும் இன்னல்களை தாங்க இயலாத கணவர் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி நேற்று அதிகாலை 4 மணிக்கு, கணேஷ் தன் சகோதரர்களுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். "நாங்கள் எங்கள் வாழ்க்கையை முடித்து கொள்கிறோம்" என்ற செய்தியை தன் தம்பிக்கு கணேஷ் அனுப்பியுள்ளார்.

பதறிப்போன சகோதரர் கணேஷ் வீட்டிற்கு விரைந்து சென்றார். வீட்டின் கதவை தாளிட்டு பூட்டி இருந்ததால் அதை உடைத்து கொண்டு உள்ளே சென்றார். அப்போது தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ரத்த வெள்ளத்தில் அவருடைய அண்ணி சடலமாக கிடந்தார்.

உடனடியாக அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கணேசன் சகோதரர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கணேஷ் கைப்பட எழுதி இருந்த கடிதமொன்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதில் "நான் விருஷாலியை பெரிதளவில் நேசித்தேன். மனநலம் பாதிக்கப்பட்ட பிறகு அவர் படும் சிரமங்களை சகித்துக்கொள்ள இயலவில்லை. ஆதலால் அவரை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த சம்பவமானது புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.