காதலியுடன் பிரபல ரவுடி சில்மிஷம்! வேடிக்கை பார்த்த நபருக்கு ஏற்பட்ட கொடூரம்!

ஐதராபாத்: ரவுடியை முறைத்த நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஜூனாயித். பிரபல ரவுடியான இவர் மீது 16 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர், நெக்லஸ் ரோட்டில், ஜூன் 13ம் தேதி தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். மேலும் தனது காதலியுடன் அங்கேயே போதையில் சில்மிஷத்தில் ஈ’டுபட்டுள்ளார்.

அப்போது அவ்வழியே வந்த சாய் சாகர் என்ற இளைஞர், இவர்களின் சில்மிஷத்தை வேடிக்கை பார்த்துள்ளார். மேலும் பொது இடத்தில் இருவரும் வரம்பு மீறுவதை நீண்ட நேரமாக வேடிக்கையும் பார்த்துக் கொண்டிருந்தார் சாய்சாகர். 

இதனால், ஆத்திரம் அடைந்த ஜூனாயித் மற்றும் சாய் சாகர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஜூனாயித் கீழே கிடந்த கல்லை எடுத்து, சாய் சாகர் தலையில் அடித்துள்ளார். அதில், பலத்த காயம் அடைந்த சாய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இதன்பேரில், ஜூனாயித் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கிடையே சாய் சாகரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய சாய் சாகர், பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.