பிரபல ஓட்டலின் பிரியாணியில் கிடந்த மர்ம பொருள்..! சாப்பிட்ட கஸ்டமருக்கு காத்திருந்த விபரீதம்! என்ன ஆச்சு தெரியுமா?

பிரியாணியில் வாடிக்கையாளர் ஒருவர் இரும்புக் கம்பியைக் கண்டுபிடித்ததை அடுத்து ஹைதராபாத் ஹோட்டலுக்கு ரூ .5,000 அபராதம் விதிக்கப்பட்டது.


சீனிவாஸ் பெல்லம், என்னும் வாடிக்கையாளர் ஜுமாடோ வழியாக குகட்பள்ளியில் ஹோட்டலில் பிரியாணி ஆர்டர் செய்திருக்கிறார். அவரது ஆர்டர் செய்த உணவை சீனிவாஸ் பிரித்து சாப்பிட்டு இருக்கிறார். அப்படி சாப்பிடும் பொழுது அவரது வாயில் ஏதோ ஒரு இரும்பு பொருள் தட்டு பட்டுள்ளது.

அதனை எடுத்து பார்த்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அதாவது அந்த நபர் தன் வாயிலிருந்த சாதத்தில் இருந்து இரும்பு கம்பியை எடுத்து இருக்கிறார். உடனே அவர் அந்த இரும்புக் கம்பிகளுடன் கூடிய பிரியாணியை புகைப்படமாக எடுத்து அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஒரு வாடிக்கையாளர் இடமிருந்து தனது உணவில் இரும்புக் கம்பி இருப்பதாகக் புகார் வந்ததையடுத்து, ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் (ஜி.எச்.எம்.சி) குகட்பள்ளியில் உள்ள ராஜா வாரி ருச்சுலு ஹோட்டலில் தீவிர ஆய்வை மேற்கொண்டு ரூ .5000 அபராதம் விதித்தனர்.

அதுமட்டுமில்லாமல் சோமொட்டோ நிறுவனம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் சீனிவாசனுக்கு தள்ளுபடி கூப்பன் வழங்கியும் நடந்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து ஹைதராபாத்தில் மட்டுமல்லாமல் பல இடங்களிலும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன‌. சமீப காலமாகவே ஹோட்டல்களில் இருந்து பெறப்படும் உணவுகள் புழுக்கள் இருப்பதும் இதுமாதிரி தேவை இல்லாத குப்பைகள் இருப்பதும் கண்டறியப்பட்டு வருகிறது. ஆகையால் உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் இதில் தலையிட்டு இம்மாதிரியான தரமற்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.