வேறு ஒரு பெண்ணுடன் காதலர் தினம் கொண்டாட்டம்! கையும் களவுமாக பிடித்த மனைவி! பிறகு?

தாலி கட்டிய மனைவியுடன் இருக்கும்போது வேறொரு பெண்ணுடன் காதலர் தினத்தை கணவர் கொண்டாடிய சம்பவமானது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்தது. காதல் ஜோடிகள் தங்களுடைய காதலை வெளிப்படுத்தும் வகையில் பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தனர். இன்னும் சில ஜோடிகள் வெளியூர்களுக்கு சென்று அந்த நாளை இனிமையாக செலவழித்தனர்.

இதனிடையே பிஹார் மாநிலத்தில் ஒரு வித்தியாசமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதாவது, ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளை பெற்ற ஆண் ஒருவர் சமீப காலமாக கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரின் நடவடிக்கைகள் மீது சந்தேகித்த மனைவி அவரை கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென்று முயற்சி செய்துள்ளார். அதன்படி நேற்று காதலர் தினத்தையொட்டி தன்னுடைய கணவரின் கள்ளகாதலியை சந்திக்க போகிறார் என்று மனைவி சந்தேகித்துள்ளார்.

உடனடியாக அவரை பின்தொடர்ந்து சென்ற போது மனைவியின் சந்தேகம் ஊர்ஜிதமானது. உடனடியாக பொதுவெளி என்றும் பாராமல் மனைவி கணவரை சரமாரியாக கேள்வி கேட்க தொடங்கியுள்ளார். காதலி மற்றும் மனைவி இருவரும் ஒரே இடத்தில் இருந்ததால் அந்த ஆண் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். கோபமடைந்த மனைவி கணவரை தாக்க தொடங்கிய பிறகு, காவல்துறையினர் அவ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்பு அனைவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கும் கணவன்-மனைவி இடையே எந்தவித சமரசமும் ஏற்பட்டவாறு தெரியவில்லை. இதனால் கணவர் மீது வழக்கு பாய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அப்பகுதி காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.