கர்ப்பிணி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கடலூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி 9 மாதத்தில் 3 மாத கர்ப்பம்! அப்போது கேட்க கூடாததை கேட்ட கணவன்! உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மனைவி செய்த காரியம்!

கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி நின்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள ஒனான்குப்பம் என்ற இடத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகயின் பெயர் வனிதா. வனிதா சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் குறிஞ்சிப்பாடி பகுதியில் வசித்துவந்த ராஜன் என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜனின் வயது 32. திருமணத்தின்போது சீர்வரிசையாக அனிதாவின் பெற்றோர் 20 பவுன் நகை, கட்டில் பீரோ முதலியவற்றை வரதட்சணையாக ராஜனுக்கு கொடுத்துள்ளனர். இவையெல்லாம் போதாது என்று ராஜன் கார் கேட்டுள்ளார்.
கார் கொடுப்பதற்கு வசதி இல்லாததால் 1.5 லட்சம் ரூபாயை ராஜனுக்கு வனிதாவின் பெற்றோர் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த பணம் பத்தாது என்று வனிதாவை ராஜன் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதற்கிடையே ராஜன் 3 மாதங்கள் கர்ப்பமாகவே இருந்துள்ளார். தனக்கு பைக் வேண்டுமென்று ராஜனும் தன்னுடைய மனைவியிடம் கூறி சீர்வரிசையாக தருமாறு வற்புறுத்தியுள்ளார்.
வேறு வழியில்லாமல் வனிதா தன்னுடைய தந்தையிடம் பைக் வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அவர், நெல் அறுவடை முடிந்த பிறகு வாங்கி தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பைக் உடனடியாக வேண்டும் என்று வனிதாவை ராஜன் கொடுமைப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி தினமும் குடித்துவிட்டு வந்து வனிதாவிடம் ராஜன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
"பணத்தை கொண்டு வா இல்லையெனில் செத்துப்போய் விடு" என்று கணவர் மிரட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த வனிதா தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு எடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவமறிந்த காவல்துறையினர் நீதிபதி முன்னிலையில் வனிதாவிடம் மரண வாக்குமூலம் வாங்கினர். அப்போது வனிதா, "கணவர் ராஜன் தன்னை வரதட்சனை கொடுமை செய்து வந்ததால் வேறு வழியின்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டேன்" என்று கூறியுள்ளார்.
சிகிச்சை பலனின்றி வனிதா இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். வனிதாவின் பெற்றோர் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.