வயசு 28..! திருமணமாகி 7 மாதம்! தலையில் மர்ம காயம்..! காதல் மனைவி சுனிதாவுக்கு நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்!

திருமணமான 7 மாதங்களிலேயே புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகரான திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டிக்கு அருகே தேர்வாய் கண்டிகை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு இதே பகுதியில் 28 வயதான சுனிதா என்ற பெண்ணுடன் 7 மாதங்களுக்கு முன்னர் நடைப்பெற்றுள்ளது.

திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டார் கேட்ட சீர்வரிசையை சுனிதாவின் வீட்டினர் கொடுத்துள்ளனர். அடுத்த மாதத்திலேயே இன்னும் அதிக வரதட்சணை கேட்டு சுனிதாவை அவருடைய வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஒருவழியாக சமாதானம் ஏற்பட்டு மீண்டும் சுனிதா தன்னுடைய கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

ஆனாலும் சுனிதாவிடம் வரதட்சணை கேட்டு அவருடைய மாமியார் வீட்டினர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். தொடர்ந்து சுனிதா புண்படுத்தப்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் கார்த்திக் சுனிதாவை பலமாக தாக்கி கொலை செய்தார். 

பின்னர் சுனிதா தற்கொலை செய்து கொண்டது போன்று நாடகம் ஆடுவதற்கு அவருடைய உடலை கயிற்றில் கட்டி தற்கொலை செய்து கொண்டது போன்று நடித்தனர். சுனிதாவின் பெற்றோர் தங்கள் மகள் கண் முன்னே இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதனர். அப்போது சுனிதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை கண்டவுடன் அவருடைய பெற்றோர் அப்பகுதி காவல் நிலையத்தில் தங்களுடைய மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகாரளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சுனிதாவின் உடல்நிலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவமானது கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.