மனைவியின் நிர்வாண புகைப்படத்தை அவரிடம் காட்டி கணவர் மிரட்டிய சம்பவமானது பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கணவன் தானே என நினைத்து ஆடை இல்லாமல் வீடியோ கால்..! ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கணவன் அரங்கேறிய விபரீதம்!

பஞ்சாப் மாநிலத்தில் ஜர்னைல் சிங் என்பவர் வசித்து வந்தார். சென்ற ஆண்டு இவருக்கு மந்தீப் கவுர் என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்கள் இருந்தே ஜர்னைல் சிங் குடும்பத்தினர் மந்தீப் கவுரை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்தாண்டு தொடக்கத்தில் ஜர்னைல் சிங் போர்ச்சுக்கல் நாட்டிற்கு வேலை நிமித்தமாக சென்றார்.
அங்கிருந்து தன் மனைவியுடன் வீடியோ கால் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சென்ற வாரத்தில் வீடியோ காலில் பேசியபோது சிங் தன் மனைவியின் ஆடைகளை கழட்டுமாறு கூறியுள்ளார். முதலில் மறுத்த மந்தீப் கவுர், பிறகு வேண்டா வெறுப்பாக ஆடைகளை களைந்துள்ளார். இதனை புகைப்படம் எடுத்துக்கொண்ட ஜர்னைல் சிங் கூடுதல் வரதட்சணை வழங்கவில்லை என்றால் இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவதாக கூறி மனைவியை மிரட்டியுள்ளார்.
தனக்கு நேர்ந்த மானபங்கத்தை மந்தீப் கவுர், தன்னுடைய பெற்றோரிடம் கூறி அழுது புலம்பியுள்ளார். இதுகுறித்து மந்தீப் கவுரின் பெற்றோர் அப்பகுதி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று ஜர்னலிஸம் போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து விடுமுறைக்காக இந்தியா திரும்பினார். உடனடியாக அப்பகுதி காவல்துறையினர் ஜர்னைல் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தினர். ஜர்னைல் சிங் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது பஞ்சாப் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது