20 வயது இளைஞனுடன் தகாத உறவு! 37 வயது மனைவியை கண்டித்த கணவன்! பிறகு அரங்கேறிய பதைபதைப்பு சம்பவம்!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கணவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள பரமத்தி எனும் பகுதிக்கு உட்பட்ட முடிகணம் என்ற இடத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய வயது 43. இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார் இவருடைய மனைவியின் பெயர் சித்ரா. சித்ராவின் வயது 37. இவ்விருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தம்பதியினருக்கு 9 வயதில் மகனும் உள்ளார்.

இவர்களுடைய வீட்டிற்கு அருகே சுதாகர் (20) என்பவர் வசித்து வந்தார். சுதாகருக்கு சித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பழக்கமானது நாளடைவில் நெருக்கமாக மாறி பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி வந்துள்ளனர். இதனிடையே பல வாரங்களுக்குப் பிறகு இந்த செய்தியை அறிந்த மனோகரன் நேற்று காலையில் சுதாகரை வன்மையாக கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் நேற்று மாலை தன்னிடமிருந்த டிராக்டரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றார். அப்போது பரமத்தியிலிருந்து முடிகணத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மாணவர்களின் மீது டிராக்டரை மோதி ஏற்றி விட்டார். உடனடியாக அங்கிருந்து சுதாகர் தலைமறைவாகிவிட்டார்.

மனோகர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் போது பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மனோகரன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மனோகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சித்ராவை கைது செய்து விசாரித்து வந்தனர். அதன்பிறகு தனிப்படை அமைத்து ஒரு வழியாக சுதாகரை கைது செய்தனர். தற்போது இருவரையும் சிறையில் அடைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவமானது பரமத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.