சிரமப்பட்டு கடன் வாங்கிக்கொடுத்த மனைவி... பணம் + காதலியுடன் எஸ்கேப் ஆன கணவன் - திருப்பூர் பகீர்

புதிய தொழில் ஒன்றை தொடங்குவதாக கூறி மனைவி மூலம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய கணவன் வேறொரு பெண்ணுடன் காணாமல் போன சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அன்னபூரணி என்னும் பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் செந்தில்குமார் சில மாதங்களாக தொழில் தொடங்கும் முனைப்புடன் செயல்பட்டு வந்தார். சமுதாயத்தில் பொருளாதார அடிப்படையில் சற்று பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பணத்தை ஈட்ட முடியவில்லை. 

தன் மனைவியிடம் தன் கஷ்டத்தை கூறி புலம்பியுள்ளார். எப்படியாவது 2 லட்சம் ரூபாய் கடன் கிடைத்தால் தொழிலை தொடங்கி விடுவேன் என்று பலமுறை விரக்தியில் கூறி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவரின் மனைவி பிரபல தனியார் நிதி நிறுவனம் மூலமாக 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கணவரிடம் அளித்துள்ளார்.

செந்தில் குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த மீனா குமாரி என்ற பெண்ணுடன் பல நாட்களாக தொடர்பிருந்துள்ளது. கடனைப் பெற்றுக் கொண்ட செந்தில், புதிய தொழிலை தொடங்காமல் மெத்தனமாக அலைந்து வந்தார். எதிர்பாராத வகையில் சில தினங்களுக்கு முன்னர் பணத்தை சுருட்டிக் கொண்டு மீனா குமாரி உடன் திருப்பூரை விட்டு ஓடிவிட்டார்.

இதனால் மிகவும் ஆத்திரமடைந்து அன்னபூரணி அப்பகுதிபகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தன் கணவனை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கும் வரை காவல்நிலையம் முன் போராட்டம் செய்யப்போவதாக கூறியுள்ளார். பின்னர் காவல் துறையினர் செந்தில்குமாரின் அடையாளங்களைக் கொண்டு அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

இந்த சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.