3 குழந்தைகளின் கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்த தந்தை! அதற்கு காரணமான அவரது மனைவி! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

தனது மனைவி வேறு ஒரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை கண்ட கணவன் மன அழுத்தத்தினால் தனது சொந்த குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தின் Nalasopara என்ற நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் கைலாஷ் பர்மர் என்பவரின் மனைவி மனிதா. இந்த தம்பதிக்கு நயன் , நந்தினி மற்றும் நாயனா என மூன்று குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில்,கொரோனாவின் ஊரடங்கின் காரணமாக இருவரும் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ள நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையின் காரணமாக வழக்கம் போல் தனது தாய் வீட்டிற்கு சுமார் 45 நாட்களுக்கு முன்னர் மனிதா சென்றுவிட்டார்.

இதற்கிடையில், நேற்று கைலாஷ் வீட்டின் அருகில் வசிக்கும் அவர் தந்தை விஜு தனது மகனை பார்க்க இரவு 8.30 மணிக்கு வந்தார். அப்போது அவர் கதவை வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் அருகில் வசிக்கும் நபர்களுடன் சேர்ந்து விஜு கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு கைலாஷ் மற்றும் மூன்று குழந்தைகளும் சடலமாக கிடந்தனர்.  

இதனை பார்த்து அதிர்ந்து போன தந்தை காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்மூன்று குழந்தைகள் கழுத்திலும் வெட்டு காயம் இருப்பது தெரிந்தது.மூன்று பேரையும் கொலை செய்துவிட்டு கைலாஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

இருந்தாலும், தற்கொலை குறித்த காரணத்தை காவல் துறையினர் விசாரிக்க தொடங்கினார்கள். அதில் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் வேதனையில் இருந்துள்ளார் கைலாஷ், இதோடு மனிதா வேறு நபருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பார்த்துவிட்டு மேலும் மன அழுத்தம் அடைந்துள்ளார்.

இதன் காரணமாக முடிவை கைலாஷ் எடுத்து இருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், விசாரணை நடத்தி வருகின்றார்கள் காவல்துறையினர். இந்த சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.