மனைவியின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்த கணவன் தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பர்கூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொளுந்தனுடன் உல்லாசமாக இருந்த மனைவி! நேரில் பார்த்த கணவன்! பிறகு அரங்கேறிய கொடூரம்!

ஐகுந்தம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் அந்த ஊரிலேயே பல வருடங்களாக மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் கஸ்தூரி. இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளன. கணவன் கோவிந்தராஜ் என்பவருக்கு சின்னசாமி என்ற ஒரு தம்பி இருக்கிறார். இந்த சின்னாசாமிக்கும், கோவிந்தராஜின் மனைவி கஸ்தூரிக்கும் இடையே கள்ள உறவு இருந்துள்ளது. மனைவி தனது தம்பியுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்துள்ளார் சின்னசாமி.
இதனால் கணவன் கோவிந்தராஜுக்கும் மனைவி கஸ்தூரிக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுவந்தன. கடந்த சில நாட்களாக இவர்களுக்கு இடையே இருந்த இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இதனை நேற்று இரவு இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உறங்க சென்றனர்.
இதனால் கடும் கோவத்திற்கு உள்ளான கணவன் கோவிந்தராஜ், மனைவி கஸ்தூரி தூங்கி கொண்டிருக்கும் போது கத்தியால் மனைவியின் கழுத்தை துடிக்க துடிக்க அறுத்து கொலை செய்துள்ளார். பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் அருகில் இருந்த பர்கூர் காவல் நிலையத்தில் கணவன் கோவிந்தராஜ் தனாகவே தனது இரண்டு மகன்களுடன் போலீசில் சரணடைந்துஉள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.