கூப்பிட்ட போதெல்லாம் வர மறுத்தாள்! அதனால்..! ரதி தேவி கொலைக்கு கணவன் சொன்ன பகீர் காரணம்!

தன்னுடன் குடும்பம் நடத்த மறுத்ததால் தாலி கட்டிய மனைவியை பள்ளிக் கூடத்தில் வைத்து கணவர் கொலை செய்துள்ள சம்பவமானது திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரசு உதவி பெற்ற பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த ரதிதேவி என்ற ஆசிரியை பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த குருமுனீஸ்வரன் என்பவரை திருமணம் புரிந்தார். திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்தன. இதனால் 2 பேரும் ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

வழக்கம் போல ரதிதேவி தன் பள்ளியில் பாடம் எடுத்து கொண்டிருந்தார்.‌ அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ரதிதேவியின் வகுப்பறையுள் குருமுனீஸ்வரன் புகுந்துள்ளார். பாடம் எடுத்து கொண்டிருந்த ரதிதேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் வெடிக்க தொடங்கியது. ஆத்திரமடைந்த குருமுனீஸ்வரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரதிதேவியின் சரமாரியாக குத்தியுள்ளார். சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் ரதிதேவி உயிரிழந்தார்.

இதனை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரதிதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

கொலைக்கு காரணமான குருமுனீஸ்வரன் தலைமறைவானதால் காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் குருமுனிஸ்வரன் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

குருமுனீஸ்வரன் கூறுகையில், எனக்கும் ரதிதேவிக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் என்னுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்தவில்லை. எப்போதும் தன் தாயாரின் வீட்டிலேயே தங்கி விடுவார். இயக்குனர்களை வைத்து பேசி பார்க்க ஆனாலும் இயலவில்லை. இந்நிலையில் தான் அவர் ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருவதை அறிந்தேன். அவரை கொலை செய்ய திட்டமிட்டு பள்ளிக்கு சென்றேன். என்னை பார்த்தவுடன் நழுவ முயன்றார். ஆனால் நான் அவரை ஹெல்மெட்டால் தாக்கினேன். கத்தியால் குத்தி கொன்றேன்" என்று வாக்குமூலம் அளித்தார்.

ரதிதேவியின் தந்தை கூறுகையில், "குரு முனீஸ்வரன் தினமும் குடித்துவிட்டு வந்து என் மகளை துன்புறுத்தியுள்ளார். இதனால் என் மகள் மிகவும் பாதிக்கப்பட்டார். குரு முனீஸ்வரரின் வீட்டில் உள்ள அனைவரும் என் மகளுக்கு எதிராக சதி செய்து வந்ததால் நான் அவரை என்னுடன் தங்க வைத்து கொண்டேன்" என்று கூறினார்.

இந்த சம்பவமானது மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.