16 வயது மகளுக்கு ஆட்டோ டிரைவருடன் காதல்! ஆதரித்த தாய்க்கு கணவனால் ஏற்பட்ட கொடூரம்!

கணவன் மனைவியிடையே உள்ள அந்யோனியம் காலம் கடந்து போக போக குறைந்து வருகிறது.


 சின்ன சின்ன மனக்கசப்புகளை கூட சகித்துக்கொள்ள இயலாமல் குறுகிய மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர். இதேபோன்று சங்கரன்கோவிலில் குடும்ப தகராறில் கணவன் ஒருவர் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் பகுதியில் நெல்கட்டும்செவல் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிறந்தவர் சமுத்திரபாண்டி. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வந்துள்ளார். இவர் மனைவியின் பெயர் வெள்ளைதுரைச்சி என்பவர். இவர்களுக்கு 16 வயதில் சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளார்.

சிவரஞ்சனி அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரை காதலித்துள்ளார். இதற்கு அவரது தாயும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளார். இதனை அறிந்த தந்தை சமுத்திரபாண்டி மனைவி மகளுடன் வாக்குவாதம் செய்துள்ளார். சண்டை இன்று மிகவும் முற்றிப்போனது. இதனால் ஆத்திரமடைந்த சமுத்திரபாண்டி தன் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். தடுக்க வந்த தன் மகளையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதையடுத்து புளியங்குடி காவல் நிலையத்தில் சமுத்திரபாண்டி சரண் அடைந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.