மனைவியை கொன்றுவிட்டு பாம்பு தாமாக கடித்து இறந்ததாக கணவர் நாடகமாடிய சம்பவமானது மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் பொண்டாட்டிய பாம்பு கடிச்சிடிச்சி! கணவன் கூறிய பரபரப்பு தகவல்! ஆனால் படுக்கை அறையில் இருந்த காட்சி!

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் எனும் இடம் அமைந்துள்ளது. இன்று அமிதேஷ் பட்டாரியா என்ற 36 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் ஷிவானி ஷிவானியின் வயது 35. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று தன் மனைவி இறந்துவிட்டதாக கூறி அமிதேஷ் பட்டாரியா அக்கம்பக்கத்தினரிடம் அழுது புலம்பியுள்ளார். இதனை அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் நம்பினர். வழக்கானது காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அமிதேஷ் நாடகமாடியது தெரியவந்துள்ளது.
நீண்ட நாட்களாக கணவன்-மனைவியிடையே கடும் சச்சரவுகள் ஏற்பட்டு வந்த வண்ணம் இருந்தன. இதனால் நீண்ட நாட்களாக மனைவியை கொலை செய்வதற்காக அமிதேஷ் திட்டமிட்டு கொண்டிருந்தார். அதன்படி விஷப் பாம்பு ஒன்றை அமிதேஷ் விலைக்கு வாங்கியுள்ளார். சம்பவத்தன்று தன்னுடைய திட்டத்தை அமிதேஷ் சகோதரி மற்றும் தந்தையிடம் கூறி அவர்களை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் தலையணையினால் மனைவியை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் விலைக்கு வாங்கிய பாம்பை மனைவியின் கைகளில் கடிக்க செய்துள்ளார். பின்னர் பாம்பு கடித்து மனைவி இருந்ததாக அனைவரிடமும் நாடகமாடி உள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிவானி மூச்சுத்திணறி இறந்தது தெரிய வந்துள்ளது.
உடனடியாக காவல்துறையினர் அமைதி மற்றும் அவருடைய சகோதரி, தந்தை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது இந்தூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.