தன் மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு தன் மனைவியை கொலை செய்து விட்டேன் என்று கணவன் நீதிமன்றத்தில் பகீர் தகவலைக் கூறியுள்ளார்.
மனைவியை சதக் சதக் என குத்திக் கொன்றது இதற்கு தான்..! கணவன் கூறிய பகீர் வாக்குமூலம்!

கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் நாயர். இவருக்கு வித்யா சந்திரன் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் வேலை செய்து வந்த வித்தியா சந்திரனை வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட அவரது கணவன் கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.
சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை செய்த கணவரை தேடி கண்டுபிடித்தனர். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை சமீபத்தில் துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில் கொலை செய்ததாகக் கருதப்பட்ட பெண்ணின் கணவன் வாக்குமூலம் அளித்தார்.
அந்த வாக்குமூலத்தில் தனது மனைவிக்கும் வேறு வருவதற்கும் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணத்தினால் என் மனைவியை கொலை செய்தேன் என்று நீதிமன்றத்தில் அவரது கணவன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.