28 வயது ராமமூர்த்திக்கு பிராக்கெட் போட்ட 45 வயது மாரியம்மாள்! கண்டுபிடித்த கணவன்! பிறகு அதிகாலையில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

தூத்துக்குடியில் கணவன் ஒருவர் தன்னுடைய சொந்த மனைவியையும் அவருடைய கள்ளக் காதலரையும் துடிக்க துடிக்க அரிவாளால் வெட்டி விட்டு அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு சென்று அரிவாளுடன் சரணடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே புங்கவர் நத்தம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலுள்ள அருந்தியர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 59) .இவர் அதே பகுதியில் விவசாயத்தை செய்து வருகிறார். சண்முகம் இதுவரை இரண்டு திருமணங்களை செய்து கொண்டிருக்கிறார்.

முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர் இதனையடுத்து சண்முகம் மாரியம்மாள் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதில் சண்முகத்திற்கு முதல் மனைவியுடன் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

அதேபோல் இரண்டாவது மனைவியுடன் சன்முகத்திற்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். சண்முகம் விவசாயம் வேலை செய்பவர். தினமும் அதிகாலையில் எழுந்து வய காட்டிற்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவர்களது வீட்டிற்கு எதிரில் ஒரு புதிதாக கட்டிட வேலை நடைபெற்று வந்துள்ளது. அந்த கட்டிட வேலையில் ராமமூர்த்தி என்பவர் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

 சண்முகத்தின் மனைவி மாரியம்மாளுக்கும் ராமமூர்த்திகும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனைக் குறித்து சண்முகத்திற்கு பலரும் தகவல் கூறியுள்ளனர். தன்னுடைய மனைவி மீது இருந்த நம்பிக்கையால் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் சண்முகம்.

இதனை அடுத்து சண்முகம் சம்பவ தினத்தன்று உடல் அசதியால் வயலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இதனைப் பற்றி அறியாத மாரியம்மாள் எப்போதும் போல ராமமூர்த்தி வீட்டிற்குள் வந்தவுடன் கதவை தாளிட்டு உள்ளே அழைத்து சென்றிருக்கிறார். பின்னர் இருவரும் ஒன்றாக கட்டிலில் இணைந்து இருந்துள்ளனர்.

சத்தம் கேட்டு வந்த சண்முகம் இருவரையும் ஒன்றாக பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தன் மனைவியையும் ராமமூர்த்தியின் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவத்தில் இருவருமே அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.

பின்னர் சண்முகம் அரிவாளுடன் ரத்தம் சொட்ட சொட்ட அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறி சரணடைந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் மேலும் ராமமூர்த்தியின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.